இன்று அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் பாபநாசம் வன சரகத்தில் உள்ள திருப்பதியாபுரம் பகுதியில் சந்தோஷ் குமார் S/o, மாடக்கண்ணு என்பவரது வீட்டில் பின்புறம் ராஜநாகம் இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில்
பாபநாசம் வன பணியாளர்கள் 1.முத்துக்குமார் வன உயிரின காவலர் 2.அசோக் குமார் வனக்காவாளர் 3.R.மணிகண்டன் சூழல் காவலர்
4.ஆசீர் சூழல் காவலர் 5.N.மணிகண்டன் சூழல் காவலர் இணைந்து அவரது வீட்டில் பின்புறம் உள்ள காளியம்மன் கோயில் திருப்பதியாபுரத்தில் 13 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்றை மீட்டு பாபநாசம் வனச்சரகம் கோவில்தேரி பீட் வனப்பகுதியில் பத்திரமாக அனுப்பி வைத்தனர் என்ற தகவலை
வனச்சரக அலுவலர் பாபநாசம் தெரிவித்தார்
நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக