திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 நவம்பர், 2025

திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி.

திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில் நவம்பர் மாதத்தின் முதல் வெள்ளியான இன்று தூத்துக்குடி டி எம் எஸ் எஸ் இயக்குனர் அமலன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. 

பெரியசாமிபுரம் பங்குத்தந்தை பாலன் மறையுறை வழங்கினார். இதில் அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருப்பலியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது. 

 மேலும் இன்று மாலை ஆறு மணிக்கு சப்பர பவனி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் சில்வெஸ்டர், உதவி பங்குத்தந்தை டைட்டஸ் மற்றும் திருத்தல நிதி குழுவினர் பங்கு இறைமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad