வங்கியில் லோன் வாங்கித் தருவதாக செக் மோசடி பாதிக்கப்பட்டவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!
திருப்பத்தூர் , நவ 11 -
மாட்டு லோன் வாங்கி தரேன் தொழிலா ளியிடம் எம்டி செக் வாங்கிய ஓனர்! 3 லட்சம் பெற்றுவிட்டதாக பிளாக் மெயில்! பாதிக்கப்பட்டவர் கலெக்டர் அலுவலகத் தில் மனு
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பகுதியைச் சேர்ந்த வேணுகோ பால் மகன் கௌதம் (வயது 21) இவர் வாணியம்பாடி அடுத்த ஆயர்பாடி கிரா மத்தைச் சேர்ந்த ஹரி என்பவர் நடத்தி வரும் ஹாலோ பிரிக்ஸ் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலை யில் கௌதம் தன்னுடைய வீட்டில் சண்டை போட்டதன் காரணமாக மூன்று மாதங்களாக ஹாலோ பிரிக்ஸ் கம்பெனி யிலேயே தங்கி இருந்ததாக கூறப்படு கிறது. அப்போது ஓனர் ஹரி உனக்கு மாட்டு லோன் வாங்கி தருகிறேன் எனக் கூறியுள்ளார் இதனை நம்பிய கௌதம் தன்னிடமிருந்த மூன்று நிரப்பப்படாத காசோலைகளை ஓனரிடம் கொடுத்துள் ளார். இந்த நிலையில் அந்த ஹாலோ பிரிக்ஸ் கம்பெனியில் வேலை புரிந்த லோகேஷ் என்பவருக்கும் கௌதம் ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள் ளது. இதனால் ஓனர் ஹரி லோகேஷ்க்கு சப்போர்ட் செய்யும் வகையில் மாட்டு லோன் வாங்க கொடுக்கப்பட்ட காசோ லையை லோகேஷிடம் கொடுத்துள்ளார்.
இதனால் லோகேஷ் தனக்கு மூன்று லட்ச ரூபாய் தர வேண்டும் எனக்கூறி வக்கீல் நோட்டீஸ் கௌதமுக்கு அனுப்பி பிளாக் மெயில் பண்ணதாக கூறப்படுகிறது.
மாட்டு லோன் வாங்கி தருவதாக கூறி பெறப்பட்ட காசோலையை தவறாக பயன்படுத்தி பணம் பெற்றதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நபர்கள் மீது நடவடி க்கை எடுக்க வேண்டும் என கூறி பாதிக் கப்பட்ட கூலித்தொழிலாளி கௌதம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித் தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக