மத்திய அரசையும், தேர்தல் ஆணையத் தை கண்டித்தும் திருப்பத்தூரில் திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!
திருப்பத்தூர் , நவ 11 -
திருப்பத்தூர் மாவட்டம் மத்திய அரசை யும், தேர்தல் ஆணையத் தை கண்டித்தும் திருப்பத்தூரில் திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆர்) கொண்டு வந்துள்ள தேர்தல் ஆணையத்தையும், மத்திய அரசையும் கண்டித்து தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில்,திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஜோலார்பேட்டை சட்டமன்றஉறுப்பினரும் மாவட்ட செயலாளருமான தேவராஜ் தலைமையில் மத்திய அரசையும்,தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சி களான கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ், திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, உள்ளிட்ட கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என 2000-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். உடன் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், நகர செயலாளர் ராஜேந்திரன், மற்றும் கூட்டணி கட்சியின் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக