தூத்துக்குடியில் வெடிகுண்டு தயாரித்த வழக்கில், சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 26 நவம்பர், 2025

தூத்துக்குடியில் வெடிகுண்டு தயாரித்த வழக்கில், சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு.

தூத்துக்குடியில் வெடிகுண்டு தயாரித்த வழக்கில், சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக வெடிகுண்டு தயாரித்து வெடித்த வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமுறைவு நபர்களை கண்டுபிடித்து கைது செய்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு.

கடந்த 09.10.2025 அன்று தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்டாரம்பட்டி பகுதியில் வைத்து அதிக சத்ததுடனும், புகை மற்றும் நெடியுடனும் வெடிக்கக் கூடிய வெடிகுண்டை சட்டவிரோதமாக தயாரித்து அதை வெடிக்க செய்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய வழக்கில் தூத்துக்குடியில் முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி மகன் குருஸ் அம்புரோஸ் (20) மற்றும் திருநெல்வேலி வி.எம் சத்திரம் பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் மகன் நாகூர்பாண்டியன் (25) ஆகிய இரண்டு நபர்கள் தலைமறைவாக இருந்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுதீர் மேற்பார்வையில் சார்பு ஆய்வாளர்கள் சுப்புராஜ், ஜெஸ்லின், தலைமை காவலர் பேச்சிமுத்து மற்றும் காவலர்கள் மீனாட்சி சுந்தரம், மருதுபாண்டியன் ஆகியோர் அடங்கிய போலீசார் மேற்படி தலைமறைவான நபர்களை பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு கடந்த 19.11.2025 அன்று மேற்படி 2 நபர்களையும் கைது செய்தனர்.

மேற்படி சட்டவிரோதமாக வெடிகுண்டு தயாரித்து வெடித்த வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமறைவு நபர்களை கண்டுபிடித்து கைது செய்து சிறப்பாக பணியாற்றியவற்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று (25.11.2025) மேற்படி போலீசாருக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad