சேவகன் அறக்கட்டளை, லயன்ஸ் சங்கம், பாத் பைண்டர்ஸ் அறக்கட்டளை, முகமது அலி சிலம்பம் வட்ட ரெட்கிராஸ் சங்கம் இணைந்து குழந்தைகள் தின விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 17 நவம்பர், 2025

சேவகன் அறக்கட்டளை, லயன்ஸ் சங்கம், பாத் பைண்டர்ஸ் அறக்கட்டளை, முகமது அலி சிலம்பம் வட்ட ரெட்கிராஸ் சங்கம் இணைந்து குழந்தைகள் தின விழா !

சேவகன் அறக்கட்டளை, லயன்ஸ் சங்கம், பாத் பைண்டர்ஸ் அறக்கட்டளை, முகமது அலி சிலம்பம்  வட்ட ரெட்கிராஸ் சங்கம் இணைந்து குழந்தைகள் தின விழா !
காட்பாடி, நவ 17 -

வேலூர் மாவட்டம் காட்பாடி சேவகன் அறக்கட்டளை, லயன்ஸ் சங்கம், பாத் பைண்டர்ஸ் அறக்கட்டளை, முகமது அலி சிலம்பம் கலைக்கூடம், காட்பாடி வட்ட ரெட்கிராஸ் சங்கம் இணைந்து குழந்தை கள் தின விழா காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள நாராயணா மண்டபத்தில் சிறப்பாக கொண்டாடப் பட்டது.  விழாவிற்கு அறக்கட்டளை தலை வர் ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் எம்.திலகர் முன்னிலை வகித்தார்.  தலைவர் கே.சோகாராமன் வரவேற்று பேசினார்.  கலை நிகழ்சி களை காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலை வர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தொடக்கிவைத்தார். 
கலைநிலைகழ்சிகளை மொகசினா தொகுத்து வழிங்கினார்.  காட்பாடி பள்ளிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சிருஷ்டி பள்ளி, முகமது அலி சிலம்பம் கலைக்கூடம் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலை நிகழ்களை வழங்கினர்.கலை நிகழ்களை வழங்கிய மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் பரிசுகளையும்  பாத் பைண்டர்ஸ் நிறுவனர் ஆர்.சுதாகர், லயன்  செயலாளர் டி.செல்வமணி, மாவட்ட செயலாளர் என்.தங்கவேல் பொருளாளர் எஸ்.சுரேஷ்குமார்ஆகியோர் வழங்கினர். செயலாளர் கே.சுந்தரமூர்த்தி ஆர்.ஜீவசெந்தில்நாதன், முடிவில் சையத் ஜாபர்சாதிக்  நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad