பேர்ணாம்பட்டு கீரீன் வேலி பள்ளியில் கர்லா கட்டை பயிற்சி மாணவ மாணவி களுக்கு வழங்க விழா !
பேரணாம்பட்டு , நவ 24 -
வேலூர் மாவட்டம் கர்லாகட்டை சங்கம் சார்பாக ஒருநாள் கர்லா கட்டை பயிற்சி பேரணம்பட்டில் உள்ள கீரீன் வேலி சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்றது நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளரும் சங்கத்தின் இணைத் தலைவருமான ஆயிஷா ஜாவித் முன்னிலையில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் பிரேம்குமார் தலைமை தாங்கினார் செயலாளர் ராஜேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார் தமிழ்நாடு மாநில கர்லா கட்டை சங்க பொதுச் செயலாளர் எஸ்.கேசவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியை வழங்கி னார் விழாவில் உடற்கல்வி இயக்குனர் கள் புனிதவதி, செல்லப்பா, மாலதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு
கிரீன் வேலி பள்ளி,நெல்லூர் பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மற்றும் செவன்த் டே மெட்ரிக் பள்ளியின் சுமார் 200 மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.இந்நிகழ்ச்சி யில் வேலூர் மாவட்ட நடிகர் சங்க பொதுச் செயலாளர் சிவக்குமார், இன்னர் வீல் சங்க நிர்வாகிகள் விஜயலட்சுமி கீதா லட்சுமி, கு.பிரியா, புவியரசி, ஜெயந்தி, கிருஷ்ணவேணி, ராணிப் பேட்டை மாவட்ட கர்லா கட்டை விளையாட்டு சங்க செயலாளர் அசோக்குமார், பொருளாளர் மனோகர் மற்றும் பலர் கலந்து கொண் டனர். சங்கத்தின் பொருளாளர் பிரியதர்ஷனி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியுரை ஆற்றினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக