தூத்துக்குடி முத்தையாபுரம் சுபாஷ் நகர் 2வது தெருவை சேர்ந்த ஜெயபாண்டி மகன் ஜெயகிருஷ்ணன் (40) இவர் எலெக்ட்ரிக்ஸ் கடை நடத்தி வருகிறார்.
இதை தொடர்ந்து 10 .11. 2025 -ம் தேதி இரவு 7.00 மணி அளவில் ஜெய கிருஷ்ணன் மனைவி முத்துக்கனி இவர் தனது இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் மெயின் ரோடு அத்திமரப்பட்டி விலக்கின் எதிரே, மீன் கடையில் மீன் வாங்க வந்ததாக தெரியவந்தது.
மீன் வாங்கிச் செல்லும் பொழுது தூத்துக்குடி இருந்து திருச்செந்தூர் செல்லும் ரோட்டை கடக்க செல்லும் பொழுது எதிரே வந்த திருநெல்வேலி மாவட்டம் உவரி மேற்கு தெருவை சேர்ந்த ஜீவன் ராஜ் மகன் இன்பெண்ட் (25) இவர் தனது பைக்கில் அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாடு மீறி ஜெய கிருஷ்ணன் மனைவி முத்துக் கனி பைக் மீது மோதியதால் இன்பெண்ட் என்பவற்கு காயம் மற்றும் முத்துக்கனி மற்றும் என்பவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் முத்துக்கனி கணவர் ஜெயகிருஷ்ணன் என்பவருக்கு தகவல் தெரிந்த உடனே சம்பவ இடத்திற்கு வந்து முத்துக் கனியை அருகில் இருந்த ஆட்டோ அழைத்து உடனே சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கே முதலுதவி சிகிச்சை முடித்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் முத்தையாபுரம் காவல் நிலையம் வந்து ஜெயகிருஷ்ணன் புகார் கொடுத்த நிலையில் முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி ,உதவி ஆய்வாளர் முகிலரசன், துணை உதவியாளர் சரவணா ரமேஷ் ஆகியோர் வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் செய்திக்காக தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக