நாகர்கோவில் புது குடியிருப்பு பகுதியில் பாதாளை சாக்கடையில் இருந்து வெளியேறும் மனித மலம்.
நாகர்கோவில் மாநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு சரிவர முடிக்கப்படாமல் உள்ளது. ஆனால் சில பகுதிகளில் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தால் தோல்வி மட்டுமே
தோல்வியில் உள்ள இத்திட்டத்தால் தொற்று நோய் பரவி வருகிறது.
குறிப்பாக பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் குழாய்கள் நிறைந்து வழிந்து பொதுமக்களால் நடந்து செல்ல முடியாதபடி துர்நாற்றத்துடன் சாலைகளில் வடிந்து ஓடுகிறது.
இதனால் நோய் தொற்று பரவுகிறது.
இதனை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் நிரம்பி வழிந்து சாலையில் ஓடிய பிறகும் கண்டுகொள்ளாமல் இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக