விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இன்று இணைந்தார். அவருக்கு தவெக நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடன் இணைந்து செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன் கோபி தொகுதியில் 8 முறையும், சத்தி தொகுதியில் ஒருமுறையும் எம்எல்ஏ-வாக தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக