கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் கீழச்சாலை பகுதியில் வசித்து வந்த தங்கச்சாமி அவர்களின் இரண்டாவது மகள் ஐஸ்வர்யா (27), BSc பட்டதாரி. கடந்த மூன்று ஆண்டுகளாக தலைமுடி அதிகமாக உதிர்ந்து வந்ததால் இவர் தீவிரமான மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தான் உயிரோடு இருப்பதை விட சாவது மேல் என்று அடிக்கடி மன வேதனையை வெளிப்படுத்தி வந்ததாக குடும்பத்தார் தெரிவித்தனர். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், ஐஸ்வர்யா மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தென்தாமரைக்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழககுரல் செய்திகளுக்தகாக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக