தூத்துக்குடியில் மது போதையில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 13 நவம்பர், 2025

தூத்துக்குடியில் மது போதையில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை.

தூத்துக்குடியில் மது போதையில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை 

நவ.13, தூத்துக்குடி முத்தையாபுரம் கிருஷ்ணா நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் லெட்சுமணன் (33) இவர் டிரைவர் வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் காதலித்து திருமணம் செய்ததாக தெரியவந்தது.

இவர் கடந்த 11. 11. 2025 அன்று வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்ததாகவும் பின்னர் 12. 11. 2025 தேதி காலையில் செல்வியின் கணவர் லட்சுமணன் மது அருந்திவிட்டு வந்ததாகவும் தெரியவந்தது. 

அதைத்தொடர்ந்து கொஞ்ச நேரம் செல்வி இடம் பேசிவிட்டு மதியம் சுமார் 1.30 மணி அளவில் செல்வி கணவர் லட்சுமணன் மாடியில் உள்ள அறைக்கு தூங்க சென்றதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2:30 மணியில் செல்வி அம்மா பேச்சியம்மாள் லட்சுமணன் என்பவருக்கு மதிய உணவு மாடிக்கு கொண்டு செல்லும் பொழுது கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததாகவும் பின்னர் தட்டிப் பார்க்கும்பொழுது திறக்காத காரணத்தினால் செல்வி மற்றும் அப்பகுதி மக்கள் கதவைத் தட்டி உடைத்து பார்க்கும் பொழுது செல்வியின் கணவர் லட்சுமணன் மின்விசிறியில் சேலையில் தூக்கிப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்ந்து லட்சுமணன் மது போதையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்தது. இந்த நிலையில் மனைவி செல்வி என்பவர் முத்தையாபுரம் காவல் நிலையம் புகார் அளித்த நிலையில் உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பிரேத பிசோதனை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி, உதவி ஆய்வாளர் முகிலரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக குரல் செய்திக்காக தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்.மா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad