திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் அவர்கள், மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாமை ஒட்டி செய்தியாளர்களிடம் பேசினார்.
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து நடத்திய இந்த ரத்த தான முகாமை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
இந்த முகாமின் சிறப்பம்சமாக, வழக்கமான இரத்தத்துடன், இரத்தப் பொருட்களையும் (Blood Products) சேகரிப்பதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, வெளியில் எளிதில் கிடைக்க முடியாத அரிய வகை இரத்தக் குழுக்களையும் (Rare Blood Group) மாணவர்கள் தானம் செய்வதால், அதனை மருத்துவப் பயனாளிகளுக்கு அளித்து சிறந்த சேவையை செய்து வருவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
இந்த சேவையைச் செய்த மாணவர்கள் மிகுந்த சேவை மனப்பான்மையுடன் முன்வந்ததாகவும், அவர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் பழங்கள் வழங்கி சிறப்பிக்கப்படுவதாகவும் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி பாலன் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
பொதுவாக ஆண்டுக்கு இருமுறை இதுபோன்ற இரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூடுதலாகத் தகவல் அளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக