கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டம் சிறுகளந்தைஊராட்சி ஜக்கார் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள எம் . என். எம். உயர்நிலைப் பள்ளியில் 28. 11. 2025 அன்று மதியம் தமிழக அரசு அறிவிப்பின்படி மாணவர்களுக்கு நல் விருந்து நிகழ்ச்சியானது சிறப்பாக துவங்கப்பட்டது.
பள்ளியின் முன்னாள் மாணவரும், புரவலருமான திரு. B. சதீஷ்குமார் அவர்களின் மகள் S. ரித்திகா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நல் விருந்து வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் திரு. R. கல்யாண சாமி அவர்கள் தலைமை தாங்கினார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. P. முருகநாதன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
நிகழ்ச்சியில் அனைத்து ஆசிரியர்களும், சத்துணவ பணியாளர்களும், 75 மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இவர்கள் அனைவரும் உணவு அருந்துவதற்கு முன்னாள் பிறந்தநாள் கொண்டாடும் குழந்தை செல்வத்திற்கு வாழ்த்து பாடலை பாடினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு பத்தாம் வகுப்பு மாணவி R. ஹேமா மாலினி வரவேற்புரை நிகழ்த்தினார்.
நிறைவாக பத்தாம் வகுப்பு மாணவர் B. ஸ்ரீ சரண் நன்றி கூறவிழா இனிதே நிறைவு பெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் M. பரமசிவம்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக