லஞ்சம் வாங்கிய தனி வட்டாட்சியர் வள்ளியம்மாள் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் கைது !
நாட்றம்பள்ளி , நவ 19 -
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுகா, ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி, நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஈமச்சடங்கு நிதி உதவி பெற சேகர் என்பவரிடம் வள்ளியம்மாள் என்பவர் லஞ்சம் கேட்டு டிமாண்ட் செய்துள்ளார், இதன் தொடர்ச்சியாக சேகர் என்பவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் 2000 லஞ்சம் வாங்கிய சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் வள்ளியம் மாள், லஞ்சம் வாங்கியதுடன் பின் தொடர்ந்து மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு துறையினரால் கையும் களவுமாக பிடிபட்டார். இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தபோது தனி வட்டாட்சியர் மயங்கியது குறிப்பிடத்தக்கது. லஞ்சம் கேட்கும்போதோ... அல்லது வாங்கும் போதோ.... வராத அந்த மயக்கம்.. கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வலையில் சிக்கி தீவிர விசாரணையின் போது மயங்கியது பொதுமக்களிடையே பெரும் பரபரப்புக்குள்ளாகியது.
லஞ்சத்திற்கு ஆசைப்பட்டு லஞ்சம் வாங்கிய தனி வட்டாட்சியர் வள்ளியம் மாள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக பிடித்து தீவிர விசார ணை மேற்கொள்ளும் போது திடீரென மயக்கம் அடைந்து என்னை கொன்னுடு ங்க சார் என கதறி அழுதுள்ளார். இதனைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை க்காக 108 ஆம்புலன்ஸில் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பத்திரிகையாளர்கள் இந்த செய்தியை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க போட்டோ வீடியோ எடுக்கும் போது பெண் போலீஸ் மருத்துவ மனையினுடைய இரும்பு கேட்டை பூட்டியது பெரும் பரபரப்பானது. இதனால் மருத்துவமனை நிர்வாகம் நாங்கள் பதில் சொல்ல வேண்டும் பேட்டை திறந்து விடுங்கள் என மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டு அதிர்ச்சியடைந்தது. இது போன்று பல்வேறு இடங்களில் செய்தி களை சேகரிக்க வரும் செய்தியாளர் களை முடக்குவது தடுப்பது வழக்கம் ஆகி விட்டது. ஜனநாயகத்தின் நான்காம்தூண் களை முடக்கும் அவலநிலை தொடர் கதையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக