தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் முன்பாக உள்ள விளையாட்டு வளாகத்தில் காவல்துறை பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ் கிளப்-ன் மாணவ மாணவிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C. மதன் முன்னெடுப்பின் படி புதிய கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதுகுறித்து பேசுகையில், இந்த விளையாட்டு அரங்கம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும், காவல்துறை பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ் கிளப்-ன் மாணவர்களின் விளையாட்டு பயிற்சியை மேம்படுத்துவதற்காகவும், அவர்களை குற்ற செயல்களில் ஈடுபடாமல் தடுக்க விளையாட்டு பயிற்சி மூலம் நல்வழிப்படுத்துவதற்காகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இந்த விளையாட்டு அரங்கத்தை உருவாக்க உதவிய காவல்துறை அதிகாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி தொடர்ந்து இதனை சிறப்பாக பாராமரிக்குமாறு காவல் ஆளுநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் , வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
தமிழக குரல் செய்திக்காக தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ். மா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக