சோளிங்கரில் அதிகாரி மயக்கம் எஸ். ஐ. ஆர் பணிச்சுமை என தகவல்! மருத்து வமனையில் அனுமதி!
சோளிங்கர் தேர்தல் துணை வட்டாட்சியர் அலுவலகத்தில் மயக்கம் அடைந்து விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் துணை வட்டாட்சியாக பணியாற்றியவர் பிள்ளையார். இவர் கடந்த ஒரு வார காலமாக (எஸ்.ஐ.ஆர்) பணிச்சுமையின் காரணமாக இருந்து வந்ததாக கூறப்படு கிறது. இந்நிலையில் அலுவலகம் வந்த அவர் அதிகமாக ரத்த அழுத்தத்தின் காரணமாக மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.இவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளார்.இது தொடர்பாக சோளிங்கர் வட்டாட்சியர் செல்வி அவர்களை தொடர்பு கொண்டு கேட்டதற்கு பிள்ளை யார் தேர்தல் அலுவலராக பணியாற்றி வருவதாகவும், இவருக்கு கடந்த சில நாட்களாகவே இரத்த அழுத்தம்பிரச்சனை இருந்து வருவதாகவும், விடுமுறை கேட்டு இருந்த நிலையில் பணிக்கு வந்த அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார் என தெரிவித்தார் அவர் ஏற்கனவே அரக் கோணத்தில் சிகிச்சை பெற்று வருவ தால் அரக்கோணத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்வதாக கூறி அரக் கோணம் மருத்துவமனைக்கு சென்றதாக வட்டாட்சியர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக