அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு நெடுஞ் சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் டாடா சுமோ திடீரென தீ ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 27 நவம்பர், 2025

அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு நெடுஞ் சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் டாடா சுமோ திடீரென தீ !

அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு நெடுஞ் சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில்  டாடா சுமோ திடீரென தீ !
குடியாத்தம் , நவ 27 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம்- காட்பாடி சாலையில் தலைமை தபால் நிலையம் அருகே தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது அலுவலகத்திற்கு வெளியே நிறித்தி வைக்கப்பட்டிருந்த உதவி கோட்ட பொறியாளர் வாகனம் டாடா சுமோ திடீரென கரும் புகையுடன் தீ பற்றி எரிந்தது இதுகுறித்து அங்கிருந்த பணியாளர்கள் குடியாத்தம் தீயணைப் புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயைகட்டுக்குள்கொண்டு வந்தனர் இதனிடையே டாட்டா சுமோ முழுவதும் தீ  பரவி சுமோ  முழுவதும் சேதமடைந்து எலும்பகாட்சியளித்தது மேலும் அலுவலகத்தில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான டாடா சுமோ திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad