வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் ரோட்டராக்ட் கிளப்பின் சாசனம் வழங்கும் விழா மற்றும் ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்ச்சி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 நவம்பர், 2025

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் ரோட்டராக்ட் கிளப்பின் சாசனம் வழங்கும் விழா மற்றும் ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்ச்சி!

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் ரோட்டராக்ட் கிளப்பின் சாசனம் வழங்கும் விழா மற்றும் ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்ச்சி!
காட்பாடி , நவ 7 -

வேலூர் மாவட்டம் காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் இன்று ரோட்டராக்ட் கிளப் ஆஃப் விஐடி யின் சாசனம் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர்  சங்கர் விஸ்வநாதன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் மாவட்ட ஆளுநர் ஜே. கே. என். பழனி மற்றும் வருங்கால மாவட்ட ஆளுநர் டி. சிவகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ரோட்டராக்ட் சேர்மன் ஹரி, சதாக்ஷி, தினேஷ், மற்றும் கோபிநாத் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிகழ்வின் ஒரு பகுதியாக, விஐடி பல்கலைக்கழகம் மற்றும் ரோட்டரி அமைப்பு இடையே ஒப்பந்தம் (MOU) கையெழுத்தாகி, மாணவர்களில் தலை மை த்துவம், புதுமை, மற்றும் சமூகப் பணியாற்றும் மனப்பாங்கை வளர்க்கும் நோக்கில் புதிய ஒத்துழைப்புக்கு துவக் கம் வைக்கப்பட்டது. விழாவின் போது முதன்மை மற்றும் சிறப்பு விருந்தினர்கள் புதிய ரோட்டராக்ட் உறுப்பினர்களுக்கு பதக்கங்களை அணிவித்து அவர்களை அதிகாரப்பூர்வமாக வரவேற்றனர். இவ்விழா, புதிய ரோட்டராக்ட் கிளப்பின் சிறப்பான தொடக்கம் எனதெரிவித்தனர் 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad