வட கிழக்கு தொடர் மழை காரணமாக நிரம்பிய தட்டாங் குட்டை ஏரி விவசாயிகள் மகிழ்ச்சி!
குடியாத்தம் , நவ 7 -
வேலுர்மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் முட்டுகூர் ஊராட்சி பொதுபணித் துறைக்கு சொந்தமான தட்டாங்குட்டை ஏரி நிரம்பி வழிந்தது விவசாயிகள் மகிழ்ச்சி கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பொழிந்து மோர்தனா அனை நிரம்பியது இதன் உப ஏரிகளான குடியாத்தம் ஒட்டியுள்ள ஏரிகள் நெல்லூர்பேட்டை அக்ராவரம் ஏரிபட்டரை எர்த்தாங்கள் செட்டிகுப்பம் உள்ளிட்ட ஏரிகள் கடந்த மாதமே நிரம்பி யது இந்த நிலை இன்று காலை தட்டாங் குட்டை ஏரி நிரம்பி வழிந்தது இதனால் அப்பகுதி விவசாயிகள் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக