தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 16 நவம்பர், 2025

தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி தமிழக மக்களின் வாக்காளர் பட்டியலில்வாக்குரிமையை பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குளறுபடிகளை கண்டித்தும் இளம் தலைமுறையினரின் வாக்குகளை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறி திமுகவை கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். 

தமிழக முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் உள்ள குளறுபடிகளை கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

தூத்துக்குடியில் விவிடி சிக்னல் பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு எஸ் ஐ ஆர் குளறுபடிகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த நிலையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் வழங்கக்கூடிய படிவத்தை திமுக நிர்வாகிகள் வீடு வீடாக வழங்கி வருகின்றனர். 

மேலும் வாக்காளர் பட்டியலில் இளம் தலைமுறை வாக்குகள் புதிய வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கையில் திமுக நிர்வாகிகள் ஈடுபட்டு வருவதாக குறழ்றம் காட்டினர் எனவே தேர்தல் ஆணையம் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை முறையாக நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

தமிழக குரல் செய்திக்காக தூத்துக்குடி மாவட்டம் செய்தியாளர் கணேஷ.மா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad