திருநெல்வேலி யூஸ்டு கார் டீலர்ஸ் & கன்சல்ட்டன்ட் வெல்ஃபார் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 16 நவம்பர், 2025

திருநெல்வேலி யூஸ்டு கார் டீலர்ஸ் & கன்சல்ட்டன்ட் வெல்ஃபார் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம்.

திருநெல்வேலி யூஸ்டு கார் டீலர்ஸ் & கன்சல்ட்டன்ட் வெல்ஃபார் அசோசியேசன் மற்றும் தமிழ்நாடு கார் வியாபாரிகள் அன்ட் ஆலோசகர்கள் நல மாநில கூட்டமைப்பு சார்பாக 
தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நல மாநில கூட்டமைப்பு
மாநிலத் தலைவர் சிவக்குமார் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

மாநில பொருளாளர்
சின்னசாமி, திருநெல்வேலி மாவட்ட தலைவர் ஜெயராமன், மாவட்ட செயலாளர் ராபின்சன், மாவட்ட பொருளாளர் ஷாம் சர்ச்சில் ஆசீர் ஆகியோரது முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் கே ஆர் வள்ளி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சங்க உறுப்பினர்களின் குழந்தைகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற குழந்தைகளுக்கு ஊக்கப் பரிசு வழங்கினர். 

தொடர்ந்து மறைந்த சங்க உறுப்பினரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கினர்.
பொதுக்குழு கூட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாவட்டத் தலைவர் ஜெயராமன் அவர்களுக்கு சங்க உறுப்பினர்கள் அனைவரும் மாலை அணிவித்து பாராட்டுகளையும் தெரிவித்தனர். 

பொதுக்குழு கூட்டத்தில் சங்கத்தின் சார்பில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad