தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் பாளையங்கோட்டை வட்டாரம் 2025 - 2026 விழிப்புணர்வு கூட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 16 நவம்பர், 2025

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் பாளையங்கோட்டை வட்டாரம் 2025 - 2026 விழிப்புணர்வு கூட்டம்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் பாளையங்கோட்டை வட்டாரம் 2025 - 2026 விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. 

உணவு, ஊட்டச்சத்து , உடல் நலம் , தன் சுத்தம் மற்றும் சுகாதாரம் பேணுதல் ஆரோக்கியமா பெண்கள் வலிமையான குடும்பங்கள் " போசன்மா " என்ற கருப்பொருளில் ஊராட்சி அளவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி நடைபெற்றது. 

30 பஞ்சாயத்துகள் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வட்டார அளவில் பாளையங்கோட்டைBMMU வைத்து போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. 

உதவி திட்ட அலுவலர் திருமதி ராதா அவர்கள் தலைமை பொறுப்பேற்றார்கள். வட்டார இயக்க மேலாளர் ஜெயா அனைவரையும் வரவேற்று போட்டிகள் நடத்தப்பட்டது. 

பாளையங்கோட்டை தாலுகா மேலப்பாட்டம் கிராமத்தில் உள்ள ஹரிஹர் நடுநிலைப் பள்ளி 6 ஆம் வகுப்பு மாணவன் வெங்கடேஷ் கட்டுரை போட்டியில் மூன்றாம் பரிசும் , 7 ஆம் வகுப்பு மாணவன் முருகன் ஓவியப் போட்டியில் ஆறுதல் பரிசும் மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவி உஷா பேச்சுப் போட்டியில் ஆறுதல் பரிசும் பெற்றனர். 

 மூன்றாம் பரிசும் மற்றும் ஆறுதல் பரிசும் பெற்ற மாணவ மாணவியை பள்ளி நிர்வாகி இரவிச்சந்திரன் அவர்களும் மற்றும் தலைமை ஆசிரியர் , ஆசிரிய - ஆசிரியர்களும் பாராட்டி வாழ்த்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad