குடியாத்தத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 நவம்பர், 2025

குடியாத்தத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் !

குடியாத்தத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் !
குடியாத்தம் , நவ 12  -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி மில் 20க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளை உள்ளடக்கிய மிக.ஊராட்சி மன்றம் ஆகும் இதில் சுமார் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில். சக்தி நகர் கிருஷ்ணா கார்டன் வள்ளலார் நகர் ஆகிய பகுதி களுக்கு கடந்த நான்கு . ஆண்டுகளில் ஊராட்சி நிர்வாகம் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யவில்லை என்று பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி மன்ற தலைவரை சந்தித்து மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத கார ணத்தால் இன்று காலை வட்டார வளர்ச்சி அலுவலக முன்ஆர்ப்பாட்டம்நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.எம் நகர செயலா ளர் வி குபேந்திரன் தலைமை தாங்கி னார் சிபிஎம் தாலுகா செயலாளர் எஸ் சிலம்பரசன் முன்னிலை வகித்தார் 
கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ் டி  சங்கரி 
சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் பி காத்தவராயன் கே சாமிநாதன் எஸ். ஏகலைவன் சிபிஎம் குடியாத்த தொகுதி பேர்ணாம்பட்டு தாலுகா செய லாளர் சி சரவணன் மாவட்ட குழு உறுப்பி னர்கள் பி குணசேகரன் ‌கே செம்மலர்  மற்றும் அப்பகுதி பொதுமக்கள்ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட் டம் செய்தனர் . இதைக் குறித்து ஒன்றிய குழு பெருந்தலைவர் சத்யானந்தம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி விரை வில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad