பிறந்த குழந்தை 12 பேருக்கு தங்க மோதிரம் - மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் வழங்கினார்.
தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 49வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை படி கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.
உதயநிதி பிறந்தநாளில் இன்று திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமையில் இதனை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் செங்குழி ஏ பி ரமேஷ், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் தயாநிதி பாண்டியன், நகர செயலாளர் வாள் ஆர் சுடலை, துணைச் செயலாளர் தோப்பூர் பெருமகராஜன், நகர இளைஞரணி அமைப்பாளர் தினேஷ் கிருஷ்ணா, துணை அமைப்பாளர்கள் கோட்டை எஸ். முத்து, வள்ளி விநாயகம், சிவராஜன், நகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் நம்பிராஜன்,
நகர ஆதிதிராவிட அணி அமைப்பாளர் சிவ ராஜா ( எ ) ஜான் மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் டேனியல், அரசு தலைமை மருத்துவர் பாவநாச குமார், நகர் மன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், ரேவதி, முத்து, ஜெயந்தி, 24வது வார்டு இளைஞர் அணி அமைப்பாளர் மாணிக்கம்,
நகர அவை தலைவர் சித்திரைகுமார், தோப்பூர் சுரேஷ் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள், இளைஞர் அணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக