இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . G.சந்தீஷ், தலைமையில் காவல்துறை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து இரத்த தான முகாம் நடைபெற்றது.
இதில் இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராமலிங்கம், மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
மேலும் இதுவரை 12 முறைகள் இரத்த தானம் வழங்கிய ஆயுதப்படை காவலர் R.சரவணபாண்டியன் என்பவர் நற்செயலை பாராட்டும் வகையில் அவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ், சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
செந்தில்குமார்
மாவட்ட செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக