குடியாத்தம் அடுத்த கொட்ட மிட்ட கிராம த்தில் பொது வழி ஆக்கிரமிப்பு வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் ஆய்வு !
குடியாத்தம், நவ 22 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோடி குப்பம் ஊராட்சி சேர்ந்த கிராமத் தை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் குடியாத்தம் காட்பாடி ரோட்டில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர் அதில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுக்கா. மோடிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட, கொட்டமிட்டா கிராமத்தில் வசிக்கும் வெங்கட கிருஷ்ணம் வீட்டு எதிரில் அதே ஊரைச் சேர்ந்த ரகுபதி என்பவர் பொதுவழி தார் சாலையில் ஏற்கனவே ஒரு காம்பவுண்ட் ஒன்று 4 வருடத்திற்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்து கட்டி . வைத்திருந்தார் பிறகு தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினர் அதனை சரி பார்த்து இது பொது வழி தான் என்று நிரூபித்து அந்த தார் சாலையில் காம் பவுண்ட் ஒன்று இருந்ததை அகற்றிவிட் டார்கள். ஆனால் தற்போது அந்த தார் சாலையில் மீண்டும் எந்தவித அனுமதி யும் பெறாமல் அதே இடத்தில் காம் பவுண்ட் கட்டி உள்ளார். இதனால் ஊர் பொதுமக்கள் சென்று வரவும் வாக னங்கள் மற்றும் டிராக்டர்கள் மற்றும் லாரிகள் சென்று வரும்போது பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது வெங்கட கிருஷ்ணன் வீட்டு எதிரில் இவர் இந்த காம்பவுண்ட் போட்டதினால் வீட்டின் அருகில் உள்ள குளியலறை மற்றும் கழிவறையில் ஒட்டி வாகனங்கள் மேலே சென்று வீட்டில் உரசி சென்று செல்கிறது இதனால் அதிக இடையூறு ஏற்படுகிறது. காம்பவுண்டை நீக்கி பொதுமக்களுக்கும், எங்களுக்கும் எந்தவித இடையூறு இல்லாமல் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது இதுகுறித்து ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் உத்தரவின் பெயரில் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, விசாரித்து வருகின்றனர். கிராம ஊராட்சிகள் பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் மேலும் ஊராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஜெயபிரகாஷ் கண்காணித்து வருகிறார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக