அங்கீகரிக்கப்படாத தனியார் வாகனங்களில் சிவப்பு-நீல நிற ஸ்ட்ரோப் விளக்குகளை (Red–Blue Strobe Lights) பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட காவல்துறை அறிவிப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 19 நவம்பர், 2025

அங்கீகரிக்கப்படாத தனியார் வாகனங்களில் சிவப்பு-நீல நிற ஸ்ட்ரோப் விளக்குகளை (Red–Blue Strobe Lights) பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட காவல்துறை அறிவிப்பு.

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு மற்றும் காவல்துறை போன்ற அரசு வாகனங்களை தவிர அங்கீகரிக்கப்படாத தனியார் வாகனங்களில் சிவப்பு-நீல நிற ஸ்ட்ரோப் விளக்குகளை (Red–Blue Strobe Lights) பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை அறிவிப்பு.

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு மற்றும் காவல்துறை போன்ற அரசு வாகனங்களைத் தவிர, தனியார் வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத சிவப்பு-நீல நிற ஸ்ட்ரோப் விளக்குகளை அரசியல் கட்சியினர்.தனியார் கார்,கனரக வாகனங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அவசரமாக செல்லவேண்டிய வாகனம் எது என்று தெரியாமல் போகின்றது. இதனால் சிவப்பு, நீல நிற விளக்கு பயன்படுத்துவது சட்டவிரோதம் எனவும், இவ்விளக்குகளை இரண்டு நாட்களில் தாமாகவே அகற்ற வேண்டும், எனவும் இல்லையெனில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ், எச்சரித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad