100 நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திற்கு எதிராக தாராபுரத்தில் திமுக–கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 24 டிசம்பர், 2025

100 நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திற்கு எதிராக தாராபுரத்தில் திமுக–கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்பு



திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியதைக் கண்டித்து, திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் இன்று (டிசம்பர் 24, 2025) பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தாராபுரம் சர்ச் சாலை பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன் தலைமை வகித்தார். தாராபுரம் ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தாராபுரம் நகரச் செயலாளர் முருகானந்தம், நகர்மன்ற தலைவர் பாப்பு ப்புக்கண்ணன், காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு, விசிக கிழக்கு மாவட்ட செயலாளர் ஓவியர் மின்னல், கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரத் தலைவர் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக கண்டித்துப் பேசினர்.



மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் என அறியப்படும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை நீக்கிவிட்டு, Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G) என்ற புதிய பெயரில் மத்திய அரசு புதிய மசோதாவை கொண்டு வந்துள்ளது. இது ஏழை, எளிய, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் வகையில் உள்ளதாகவும், மாநில அரசுகளின் மீது கூடுதல் நிதிச் சுமையை ஏற்றும் முயற்சியாகவும் திமுகவினர் குற்றம் சாட்டினர்.



இந்த புதிய மசோதாவைக் கண்டித்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, இன்று குண்டடம்,மூலனூர் ஒரே நேரத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது.


 அதன் ஒரு பகுதியாக தாராபுரத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்தில், தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட 100 நாள் வேலை வாய்ப்பு திட்டப் பயனாளிகள் மற்றும் தொழிலாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். மேலும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள VB-G RAM G மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதே இந்த ஆர்ப்பாட்டத்தின் பிரதான கோரிக்கையாக வலியுறுத்தப்பட்டது.


முன்னதாக, 100 நாள் வேலைத் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவது, உரிமைகள் சார்ந்த வேலைவாய்ப்பு சட்டத்தின் ஆன்மாவை சிதைப்பதாகும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad