தந்தை பெரியாரின் 49-ஆம் ஆண்டு நினைவு நாள் : தாராபுரத்தில் அமைச்சர் கயல்விழி மலர் தூவி மரியாதை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 24 டிசம்பர், 2025

தந்தை பெரியாரின் 49-ஆம் ஆண்டு நினைவு நாள் : தாராபுரத்தில் அமைச்சர் கயல்விழி மலர் தூவி மரியாதை


தந்தை பெரியாரின் 49-ஆம் ஆண்டு நினைவு நாள் : தாராபுரத்தில் அமைச்சர் கயல்விழி மலர் தூவி மரியாதை சுயமரியாதை, சமத்துவ சிந்தனைகளை தலைமுறையெல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும் – அமைச்சர் பேச்சு



திருப்பூர் மாவட்டம், தாராபுரம்,

தமிழ் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தையாக போற்றப்படும் ஈரோட்டு சிங்கம் தந்தை பெரியாரின் 49-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று தாராபுரத்தில் அனுசரிக்கப்பட்டது. தாராபுரம் – உடுமலை சாலையில் அமைந்துள்ள பெரியார் திடலில் உள்ள அவரது திருவுருவ வெங்கலச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திமுக திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் கலந்து கொண்டு, தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தாராபுரம் நகரச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.


நிகழ்ச்சியில் பேசிய , மாவட்டச் செயலாளர் பத்மநாபன் தெரிவிக்கையில். தந்தை பெரியார் வாழ்நாள் முழுவதும் சுயமரியாதை, பகுத்தறிவு, பெண் விடுதலை, சமூக நீதி ஆகிய கொள்கைகளுக்காக போராடியவர் என குறிப்பிட்டார். சாதி, மூடநம்பிக்கை, அநீதி ஆகியவற்றுக்கு எதிராக அவர் எழுப்பிய குரல் இன்றும் சமூக மாற்றத்திற்கு வழிகாட்டியாக உள்ளதாக கூறினார். பெரியாரின் சிந்தனைகள் ஒரு காலகட்டத்துக்கானவை அல்ல, தலைமுறைகள் தோறும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய கட்சி நிர்வாகிகள், பெரியார் இல்லையெனில் சமூக நீதி, இடஒதுக்கீடு, பெண்களுக்கு கல்வி, உரிமை போன்றவை சாத்தியமாகியிருக்காது என தெரிவித்தனர். பெரியாரின் கொள்கைகளை நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றுவதே அவருக்கு செலுத்தும் உண்மையான மரியாதை என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் திமுகவினர், திராவிட கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad