குடியாத்தத்தில் பூட்டிய வீட்டில் 5 சவரன் நகை கொள்ளை போலீசார் விசாரணை!
குடியாத்தம் , டிச 24 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்பாபுரம் கொச அண்ணாமலை தெருவில் வசிக் கும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை கஸ்தூரி பாய் (வயது 75) இவரது கணவர் ஹரிதாஸ் என்பவர் . சென்ற ஆண்டு. இறந்துவிட்டார். இந்நிலையில் இவர் களுக்கு சொந்தமான ஜவஹர்லால் தெருவில் மற்றொரு வீட்டில் கஸ்தூரி பாய் தனியாக வசித்து வருகிறார்.
இதனால் கொச அண்ணாமலை தெரு வில் இருக்கும் வீட்டிற்கு அவ்வப்போது வந்து செல்லுவார் வழக்கு போல நேற்று முன்தினம். கொச அண்ணாமலை தெரு வில் உள்ள வீட்டிற்கு . கஸ்தூரிபாய் சென்றார். அப்போது அருகில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்து துணி மணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் . பின்பு
மற்றொரு அறையை திறந்து பார்க்கும் போது அங்கு இருந்த பீரோ உடைக்கப் பட்டு அதிலிருந்த . பொருட்கள் . சிதறி இருந்தது. இதைக் குறித்து அவர் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பொறு ப்பு சிவசங்கர ன். எஸ்பி தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் சம்பவத்திற்கு வந்து பார் வையிட்டு விசாரணை செய்தனர்.
அதைத்தொடர்ந்து நேற்று மோப்ப நாய் சாரா வரவழைக்கப்பட்டு வீட்டின் உள்ளே சென்று சிறிது தூரம் ஓடிச் சென்றது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை
மேலும் இது சம்பந்தமாக கைரேகை நிபுணர்களை வரவழைத்து கதவு பீரோ ஆகிய பகுதிகளில் தடயங்களை சேகரித் தனர் இதில் முதற்கட்ட விசாரணையில் வீட்டின் பின்புறம் உள்ள கால்வாய் வழியாக வந்து வீட்டின் பின்புறம் மாடி யில் இருந்த கம்பிகளை உடைத்து வீட்டுக்குள்.புகுந்த திருடன் இரண்டு பீரோக்களை உடைத்து அதிலிருந்த 5 . சவரன் நகைகளை திருடி சென்று உள்ளான். மேலும் அங்கு துணிகள் அடியில் இருந்த நாலு பவுன் நகை வெள்ளி பொருட்கள் அப்படியே இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட அதனை உரியவரிடம் ஒப்படைத்தனர் மேலும் திருடன் வீட்டில் இருந்த பித்தளை பாத்திரங்களை தூக்கிச் செல்ல சாக்குப் பையில் மூட்டை கட்டிஅதை தூக்க முடியாததால் அவற்றை அங்கேயே விட்டுவிட்டு சென்று
உள்ளான்இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக