குடியாத்தம் கே வி குப்பம் தனி தொகுதி களில் , அதிமுக சார்பில் போட்டியிட பேரணம்பட்டு கேப்டன் எஸ் பிரசாத் குமார் விருப்ப மனு !
குடியாத்தம் , டிச 24 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் எஸ் பிரசாத் குமார் , கப்பல் கேப்டன் பணியில் இருந்தவர் ,
தற்போது கல்வி நிலையங்களை நடத்தி வருகிறார்.மறைந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி தற்போது அதிமுகவில் தீவிர உறுப்பினராக உள்ளார்.கடந்த 5 சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அப் போதைய பேரணாம்பட்டு தொகுதி , தற் போதைய குடியாத்தம் , கே வி குப்பம் ஆகிய தனி தொகுதிக்கு போட்டியிட விருப்ப மனு அளித்து வந்தார்.அதன்படி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் குடியாத்தம் மற்றும் கே வி குப்பம் தனித் தொகுதியில் போட்டியிட நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத் தில் விருப்பம் தெரிவித்து மனு அளித் தார். பின்னர் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்னிடம் வாழ்த்து பெற்றார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக