கன்னியாகுமரி - இரண்டு கோடியே ஜந்து லட்சம் மதிப்புள்ள 1265 செல்போன்கள் மீட்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஸ்டாலின் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 15 டிசம்பர், 2025

கன்னியாகுமரி - இரண்டு கோடியே ஜந்து லட்சம் மதிப்புள்ள 1265 செல்போன்கள் மீட்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஸ்டாலின் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை இந்த வருடத்தில் மட்டும் இரண்டு கோடியே ஜந்து லட்சம் மதிப்புள்ள 1265 செல்போன்கள் மீட்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
ஸ்டாலின் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர். உத்தரவிட்டார்கள். உத்தரவின்படி சைபர் பிரிவு போலீசார் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். 

தொடர் நடவடிக்கையால் தற்போது சுமார் 58,00,000 (ஐம்பத்தி எட்டு இலட்சம் ரூபாய்) மதிப்புள்ள 335 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கபட்டுள்ளது. மேற்படி மீட்கபட்ட செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நபர்களிடம் இன்று ஒப்படைத்தார்கள். 
மேலும் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த வருடத்தில் இதுவரையிலும் சுமார் 2,05,00000/- (இரண்டு கோடியே ஜந்து இலட்சம் ரூபாய்) மதிப்புள்ள 1265 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த செல்போன்கள் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வெளி மாநிலத்தில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் தங்களுடைய செல்போன் தொலைந்து போனால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக மனு அளிக்கவேண்டும் அல்லது TamilNadu Police Citizen Portal (https://eservices.tnpolice.gov.in)என்ற காவல் துறை இணையதளத்திலும் தங்களது புகாரை பதிவு செய்யலாம். 
CEIR Portal (https://www.ceir.gov.in/)* என்ற இணையதளத்தில் தொலைந்த செல்போனை Block செய்யவும் செல்போனை மீட்க காவல்துறைக்கு உதவவும் முடியும்.

திருட்டு செல்போன்களை உபயோகப்படுத்துவதும் விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாகும்.
செல்போன்களை ஒருவரிடம் இருந்து இரண்டாவது முறையாக வாங்கும் பொதுமக்கள் அல்லது விற்பனையாளர்கள் அந்த செல்போன் விற்பனை செய்யும் நபருடையதுதானா என்பதை அந்த செல்போன் வாங்கப்பட்டதற்கான உரிய ரசீது, Box ஆகியவற்றை சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad