20 நாட்களாக வீணாகும் குடிநீர்… ஜடையம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளுமா ? - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 15 டிசம்பர், 2025

20 நாட்களாக வீணாகும் குடிநீர்… ஜடையம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளுமா ?


கோவை மாவட்டம், காரமடை ஒன்றியம், ஜடையம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்திற்குட்பட்ட ஆலாங்கொம்பு கூட்டுறவு சொசைட்டி அருகில், யூனியன் பாங்க் எதிர்ப்புறத்தில் குடிநீரானது ஆழ்துளை கிணற்றிலிருந்து வெளியேறும் நீர் போல தொடர்ந்து கொப்பளித்து வீணாகி வருகிறது.




இதனால் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களும், வணிக வளாகங்களில் கடை நடத்தி வரும் கடை உரிமையாளர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வீணாகி வருவதாகவும், இதுகுறித்து ஜடையம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஒருபுறம் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், மறுபுறம் இவ்வாறு குடிநீர் வீணாவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காதது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, குடிநீர் வீணாவதை தடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

 தமிழக குரலுக்காக மாவட்ட ஒளிப்பதிவாளர் கார்த்திக்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad