குள்ளாச்சாரி வட்டத்தில் ரூ.1.55 கோடி மதிப்பில் கிராம அறிவு மையம் திறப்பு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 6 டிசம்பர், 2025

குள்ளாச்சாரி வட்டத்தில் ரூ.1.55 கோடி மதிப்பில் கிராம அறிவு மையம் திறப்பு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு !

குள்ளாச்சாரி வட்டத்தில் ரூ.1.55 கோடி மதிப்பில் கிராம அறிவு மையம் திறப்பு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு !
திருப்பத்தூர் , டிச 6 -

திருப்பத்தூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட அம்பேத்கர்புரம்  குள்ளாச்சாரி வட்டத்தில் ரூ.1.55 கோடி மதிப்பில் கிராம அறிவு மையம் திறப்ப திருப்பத்தூர் மாவட்டத் தில் மாநில அரசு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் அம்பேத்கர்புரம் மற்றும் குள்ளாச்சாரி வட்டம் பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட கிராம அறிவு மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்த புதிய கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி குத்துவிளக் கேற்றி திறப்பு விழாவை தொடங்கி வைத்தார்.
விழாவைத் தொடர்ந்து உரையாற்றிய எம்எல்ஏ நல்லதம்பி,தமிழக முதலமைச்சர் பெண்கள் முன்னேற்றத்திற்காகபல்வேறு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் என்றும், மாநிலம் முழுவதும் மக்கள் நலத்திற்கான பல திட்டங்களை அரசு கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக முதல்வருக்கு ஆதரவு தர வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டு கோள் விடுத்தார் என்று தெரிவித்தார்.நிகழ்ச்சியில் திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ். ராஜேந்திரன், நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், நகரமணத் துணைத் தலைவர் ஏ ஆர் சபியுல்லா. 36 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் வெற்றி கொண்டான் மாவட்ட பிரதி சிவலிங்கம், ஊர் பொதுமக்கள், சமூக அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் உள்ளிட்ட ஏராளமான மக்கள் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.

 செய்தியாளர்.
மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad