திருப்பத்தூர் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் முன்னிட்டு நல திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர் !
திருப்பத்தூர் , டிச 6 -
திருப்பத்தூர் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் தாயுமானவர் திட்டம் தொடக்க விழா திருப்பத்தூர் சி.கே.சி மஹாலில் இன்று காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் க. சிவ சௌந்தரவல்லி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கதிர் சங்கர் வரவேற்புரை யில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாள ராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.வில்வ நாதன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர். சூரியகுமார் கலந்து கொண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 39 பயனாளிகள் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 50 பயனாளிகள் தாட்கோ சார்பில் 59 பயனாளிகள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 2055 பயனாளிகள் பல் வேறு துறை சார்ந்த மொத்தம் 2391 பயனளிகளுக்கு ரூ 6,39,96,654 மதிப் பீட்டில் நலதிட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்கள்.
உடன் திருப்பத்தூர் நகர மன்ற துணைத் தலைவர் சபியுல்லா திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ்.ஆர். ராஜேந்திரன் 25- வது வார்டு உறுப்பினர் பர்வீன் பேகம் தாட்கோ மாவட்ட மேலாளர் க.சரளா மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர் கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக