அகவலம் மோட்டூர் பகுதியில் ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில், மேநீர் தேக்கத் தொட்டி கட்ட ஒன்றிய குழு தலைவர் அடிக்கல் நாட்டினார் !
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அகவலம் மோட்டூர் பகுதியில், மேநீர் தேக்கத்தொட்டி அமைத்த தர வேண்டு மென அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். அதனடிப் படையில் நெமிலி ஊராட்சி ஒன்றியத் தின் 2025-2026ஆம் நிதியாண்டிற்கான 15-வது நிதிக்குழு மானிய நிதியிலிருந்து, ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில், மேநீர் தேக்கத் தொட்டி அமைப்பதற்கான அடிக்கல்நாட்டு விழா, ஒன்றியக்குழு உறுப்பினர் தகிருஷ் ணவேணி வெங்கடேசன் அவர்கள் தலை மையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக, நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு அவர்கள் கலந்து கொண்டு, மேநீர் தேக்கத்தொட்டி கட்ட அடிக்கல் நாட்டினார் இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சுப்பிர மணி, வெங்கடேசன், வாசு, இளங்கோ, சுந்தரம் மற்றும் முகம்மது அப்துல் ரகு மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக