ஏரல் - விஸ்வகுல உரிமை மீட்பு தினம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 16 டிசம்பர், 2025

ஏரல் - விஸ்வகுல உரிமை மீட்பு தினம்.

ஏரல் - விஸ்வகுல உரிமை மீட்பு தினம்.

ஏரல் விஸ்வகர்மா கலை வளாகத்தில்
15.12.2025 திங்கட்கிழமை காலை விஸ்வகுல உரிமை மீட்பு தினம் கொண்டாடப்பட்டது

ஆங்கிலேயர் காலத்தில் சித்தூர் அதாலத்துக்கோர்ட்டில் விஸ்வகர்மா சமூகத்தினர்களுக்கும் வேதங்கள் ஓதி புரோகிதம் செய்ய உரிமை உண்டு என்று

ஆரணி அருகே சதுப்பேரி ஊரில் விஸ்வகுல பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரியால் வழக்கு தொடுத்து
15.12.1818 ல் வெற்றித் தீர்ப்புப் பெற்ற இந்த 207 ம் ஆண்டு தினத்தை கொண்டாடும் விதமாக பண்டிதர் மார்க்கசகாய ஆச்சாரி உருவப்படத்திற்கு மாலையிட்டு மலர் தூவி
மரியாதைச் செய்யப்பட்டது.

நகைமதிப்பீட்டாளர் சங்க மாவட்ட தலைவர் மகாராஜன் தலைமை வகித்தார்
புளியநகர் வாய்ப்பாட்டுக் கலைஞர் கந்தன் சமூக எழுச்சிப் பாடல்கள் பாடினார். பொற்கலைஞர்கள் 
கணேசன், ஐயப்பன், கவிஞர் ஏரல் ராஜன்
மாரியப்பன் உள்பட பலரும் கலந்து கொண்டனர். 

யோகா ஆர்வலர் தென்கரை மகாராஜன் எல்லோருக்கும் இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சி எட்டாம் ஆண்டாகத் தொடரும் நிகழ்ச்சியாகும். நிகழ்ச்சி ஏற்பாடு செய்த கவிஞர் ஏரல் ராஜன்,
மார்க்கசகாய ஆச்சாரியார் பண்டிதர் பற்றிய விபரங்களை எடுத்துரைத்து முடிவில் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad