திருச்செந்தூர், அருகே காந்திபுரத்தைச் சேர்ந்த சின்னத்துரை மகன் இசை வனத்துரை என்பவர் கடந்த 26.11.2025 அன்று தனது உறவினர் இல்லத் திருமண விழாவிற்கு செல்வதற்காக ஒரு பையில் 18 பவுன் தங்க நகைகளுடன் வீட்டை விட்டு வெளியே கிளம்பி அந்த பையை வீட்டின் அருகில் வைத்து வீட்டு மற்றொரு பையினை எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்றுள்ளார்.
திரும்பி வந்து பார்த்தபோது நகைகள் உள்ள பை திருடு போனது அவருக்கு தெரிய வந்தது.
இதுகுறித்து இசை வனத்துரை அளித்த புகாரின் அடிப்படையில் திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் இன்னோஷ்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் காந்திமதி, குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் குரும்பூர் கூர்ந்தான்விளையைச் சேர்ந்த முத்து மகன் வைகுண்ட வாசகன் (எ) வைகுண்டம் (29) மற்றும் திருச்செந்தூர் அடைக்கலாபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மகன் விஜயகுமார் (27) ஆகியோர் அந்த தங்க நகை உள்ள பையினை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும், போலீசார் வேல்பாண்டியன், ரமேஷ் கண்ணன், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் கைது செய்து அவர்களிடமிருந்து 18 பவுன் தங்க நகைகளையும் மீட்டனர்.
மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக