வாணியம்பாடியில் போலி வாரிசு சான்றி தழ் மற்றும் ரேஷன் கார்டு தயாரித்து பணம் பறித்த தந்தை, மகன் 2 பேர் கைது!
வாணியம்பாடி, டிச.24-
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதி சேர்ந்தவர் ஜீவா (வயது 47), இவருடைய தாயார் இறந்த நிலையில் அதற்கான வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று உள்ளார்.
அப்போது மனுவாக எழுதிக் கொடுங்கள் என அதிகாரிகள் கூறிய நிலையில் அதற்காக அங்கு மனு எழுதிக் கொடுக்கும் வெங்கடேசன் என்பவரிடம் நாடி உள்ளார். அதற்கு அனைத்துமே நானே வாங்கித் தருகிறேன், வாரிசு சான்றிதழ் வாங்குவதற்கு 15 ஆயிரம் ரூபாய் செலவாகும் எனவும் தெரிவித்து ள்ளார்.அதற்கு அவர் 11 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு பணத்தை வெங்கடேசனிடம் வழங்கி உள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த ஜனவரி மாதம் வாரிசு சான்றிதழ்கொடுத் துள்ளார்.பிறகு அவரிடமே அவரது சித்திக்கு ரேஷன் கார்டு வேணு மென அணுகி உள்ளார். அதற்கு 6 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்று கூறி 5 ஆயிரம் கொடுத்துள்ளார். வெங்கடேசன் வழங்கிய ரேஷன் கார்டு எடுத்து சென்று ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க முயன்ற போது அது போலியான ரேஷன் கார்டு என்று தெரிய வந்துள்ளது.
மேலும் அவருடைய தாயார் இறப்பிற்காக ஐம்பதாயிரம் ரூபாய் அரசு தரப்பில் வந்துள்ளதால் அதனை பெற வெங்கடே சன் மூலமாக பெற்ற வாரிசு சான்றிதழை எடுத்து சென்று கிராம நிர்வாக அலுவல ரிடம் கொடுத்த போது அது போலியானது கூறியதால் அதிர்ச்சி ஜீவா அடைந்தார்.
இதுகுறித்து சான்றிதழ் வாங்கி கொடுத்த வெங்கடேசனை அணுகிய போது அவர் முறையாக பதில் கூறாமல் அலைக் கழித்து வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான ஜீவா இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆட்சியர் அலுவலகதில் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் நகர காவல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வெங்கடேசன் வழங்கியது போலிச் சான்றிதழ் என தெரிய வந்தது.இதனை தொடர்ந்து இ சேவை நடத்தி போலி சான்றிதழ், ரேஷன் கார்டு வழங்கிய பெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேசன் ( வயது 50) மற்றும் அவருடைய மகன் கரண் (வயது 28) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து போலி வாரிசு சான்றிதழ், ரேஷன் கார்டு, கம்ப்யூட்டர், பிரிண்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
வாணியம்பாடியில் போலி வாரிசு சான்றிதழ் மற்றும் ரேஷன் கார்டு வழங்கி பணம் பறித்த தந்தை, மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்.மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக