மாவட்ட இளைஞரணி அலுவலகத்தில் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு குருபூஜை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 28 டிசம்பர், 2025

மாவட்ட இளைஞரணி அலுவலகத்தில் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு குருபூஜை.

மாவட்ட இளைஞரணி அலுவலகத்தில் 2ம் ஆண்டு நினைவு குருபூஜை - குழந்தைகளுக்கு கல்வி உபகரணம், அன்னதானம்.

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். 

அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இன்று, 2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் பொதுச்செயலாளர்  பிரேமலதா மற்றும் தேமுதிக தொண்டர்களும் ரசிகர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். நினைவு தினத்தை தேமுதிக குருபூஜையாக அனுசரித்து வருகிறது.

தூத்துக்குடி அலுவலகத்தில் மாவட்ட இளைஞரணி  செயலாளர் ஏரல் அரியபுரம் இசக்கிமுத்து தலைமையில் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய பிரதிநிதி ஏரல் பூக்கடை கண்ணன் முன்னிலையில் விஜயகாந்தின் குருபூஜை அனுசரிக்கப்பட்டது. 

இதில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அனைவருக்கும் மாவட்ட இளைஞரணி செயலாளர் இசக்கிமுத்து, கடலூரில் தேமுதிக சார்பில் நடைபெறும் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 அழைப்பிதழை வழங்கினார்.

விழாவில் இளைஞரணி நிர்வாகிகள் சுடலையாண்டி, வாழை நடராஜன் , கேப்டன் முருகன் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad