அவலான் டேட்டா புராடக்ட்ஸ் சார்பில் இன்று நடைபெற்ற கண்காட்சியில், செயற்கை நுண்ணறிவு வசதி கொண்ட இன்டெல் அல்ட்ரா 5, 7 மற்றும் 9 பிராசஸர்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
ஆன்லைன் கேமிங் மற்றும் மென்பொருள் பயன்பாட்டிற்காகப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த பிராசஸர்களின் அதிவேக செயல்பாட்டை நூற்றுக்கணக்கான பயனாளர்கள் நேரடி செயல்விளக்கம் மூலம் கண்டு வியந்தனர். குறிப்பாக கேமிங் மற்றும் புரோகிராம்களில் இதன் வேகம் அபாரமாக இருந்ததாகப் பாராட்டினர்.
தொடர்ந்து நடைபெற்ற கேமிங் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்டெல் மற்றும் அவலான் நிறுவனங்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக