ஆம்பூர் அருகே மரம் அறுக்கும் போது தொழிலாளி மீது தென்னை மரம் விழுந்து உயிரிழப்பு!
வாணியம்பாடி, டிச.28-
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியில் சங்கர் என்பவரு க்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரம் உள்ளிட்ட பல் வேறு மரங்களை வெட்டுவதற்காக மரம் அறுக்கும் தொழிலாளர்கள் 5க்கும் மேற்பட்டோர் மரங்கள் வெட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர் பாராத விதமாக மரம் அறுக்கும் தொழி லாளி பெரிய வெங்கடசமுத்திரம் பகுதி யை சேர்ந்த சுரேஷ் (வயது 42) என்பவர் மீது தென்னை மரம் விழுந்து தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே யே உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரை ந்து சென்ற உமராபாத்காவல்துறையினர் பிரேதத்தை கைபற்றி பிரேத பரிசோத னைக்காக ஆம்பூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். இறந்த சுரேஷ் கடந்த சில மாதங் களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மீது கொடுத்த புகாரை காவல் நிலையத்தில் எடுக்க வில்லை எனக் கூறி காவல் நிலைய வளாகத்தில் இருந்த தென்னை மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக