*தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 26.11.2025 அன்று திறந்து வைக்கப்பட்ட ஈரோடு சோலார் புதிய பேருந்து நிலையம், 2025 டிசம்பர் 4ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11.00 மணி முதல் முழுமையாகச் செயல்பட உள்ளது.*
*இதன்படி, கரூர், மதுரை, வெள்ளகோவில் ஆகிய மார்க்கங்களில் செல்லும் அனைத்துப் புறநகர்ப் பேருந்துகளும் சோலார் புதிய பேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்பட உள்ளன.* *மேலும், மதுரை, திருச்சி மற்றும் வெள்ளகோவிலில் இருந்து ஈரோடு வரும் பேருந்துகளும் சோலார் பேருந்து நிலையத்திற்கே வந்து சேரும்.*
*பொதுமக்களின் வசதிக்காக, சோலார் பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு மத்திய பேருந்து நிலையம் மற்றும் நகரப் பகுதிகளுக்குச் செல்லப் போதுமான நகரப் பேருந்து வசதி செய்து தரப்பட்டுள்ளது.* *அத்துடன், ஆட்டோ மற்றும் டாக்ஸி சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர்
ம.சந்தானம்
ஈரோடு மாவட்டம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக