ஈரோடு ரங்கம்பாளையம் இரணியன் வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் வட மாநில வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்ததை கண்ட பொதுமக்கள் அவரை பிடிக்க முயன்றனர். அவர் பதிலளிக்காமல் தப்பிக்க முயன்று, அருகில் இருந்த கட்டையால் தாக்க முயன்றார். பின்னர், பொதுமக்கள் அவரை துரத்தி ஒரு பங்களா வீட்டில் சுவர் ஏறி குதித்து பாத்ரூமில் ஒளிந்திருந்த அவரைப் பிடித்தனர். வட மாநில வாலிபர் கொள்ளையடிக்க வந்தாரா என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக