டிச. 25, தூத்துக்குடியில் திருச்செந்தூர் சாலை, சத்யாநகர் பகுதியில் உள்ள உப்பளம் அருகே வாலிபர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஆய்வாளர் திருமுருகன் உதவி ஆய்வாளர் காவராசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் விசாரணையில் உயிரிழந்த நபர் சுமார் 45 வயதுடையவர் என அறியப்பட்டுள்ளது.
மாநகர காவல் துணை கண்காணிப்பாளர் மதன் சம்பவ இடத்தில் பார்வையிட்டார். சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகள் யார் என்பது குறித்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக