டிசம்பர் 25 தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள கருங்குளம் வகுளகிரி மலையில் உள்ள வெங்கடாசலபதி கோயிலில் பிரார்த்தனை கருடசேவை நடந்தது.
காலை 7 மணிக்கு விஸ்வரூபம். 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம். 11 மணிக்கு அலங்காரம். தீபாராதனை. 12 மணிக்கு சாத்து முறை கோஷ்டி. தீர்த்தம். சடாரி. பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு சாயரட்சை. 6.30 மணிக்கு உற்சவர் சீனிவாசன் கருட மண்டபத்திற்கு எழுந்தருளினார். 8 மணிக்கு கருட வாகனத்தில் காட்சி தந்தார்.8 15 மணிக்கு கருட வாகனம் மலையில் இரண்டு சுற்று சுற்றி வந்தது.
பின்னர் உற்சவர் தோளுக்கினியானில் ஆஸ்தானம் சென்றார்.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ராஜேஷ். சுதர்ஸன். திருவாய்மொழி பிள்ளை மேலத்திருமாளிகை ஸ்வாமி திருமலாச்சாரியார். உபயதாரர் ராமன். நம்பி. சேதுராமன் . கருங்குளம் சங்கர். கண்ணன். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன். ஆய்வாளர் நிஷாந்தினி.கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக