நெல்லையில் பல்வேறு துறைகளின் சார்பில் 45,477 பயனாளிகளுக்கு 101 கோடியே 49 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

நெல்லையில் பல்வேறு துறைகளின் சார்பில் 45,477 பயனாளிகளுக்கு 101 கோடியே 49 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

பல்வேறு துறைகளின் சார்பில் 45,477 பயனாளிகளுக்கு 101 கோடியே 49 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 

திருநெல்வேலி மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 430 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள், 20 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் உதவிகள், 

மகளிர் திட்டத்தின் சார்பில், 2550 பயனாளிகளுக்கு சுய உதவிக் குழு வங்கி இணைப்பு, நலிவு நிலை குறைப்பு நிதியுதவி, சமூக முதலீட்டு நிதி, அமுத சுரபி நிதி போன்ற பல்வேறு நிதியுதவிகள், வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் கீழ், 189 பயனாளிகளுக்கு நுண் நிறுவன நிதி கடன் உதவிகள்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், 707 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், கலப்பு திருமண நிதியுதவி திட்டம், ஈ.வே.ரா, விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம், ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டம், கனரக ஓட்டுநர் உரிமம் வழங்குதல், 

தையல் இயந்திரம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள்; 4 பயனாளிகளுக்கு சத்துணவுத் திட்டத்தின் கீழ் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள்,
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், 325 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை,

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், 390 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், திறன்பேசி, மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில், 45 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம், இலவச தேய்ப்பு பெட்டிகள், சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டைகள்; சிறுபான்மையினர் நலத் துறை சார்பில், 51 பயனாளிகளுக்கு கிறித்துவ மகளிர் உதவும் சங்கம், 

கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர் நலவாரியம், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் ஆகியவற்றின் கீழ் உதவிகள்,

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், 2,500 பயனாளிகளுக்கு உழவர் காசுக் கடன், கால்நடை மூலதனக் கடன், சுய உதவிக்குழு கடன், சிறுவணிகக் கடன், மாற்றுத்திறனாளி கடன், கணவனால் கைவிடப்பட்ட கைம்பெண்/விதவைகளுக்கான கடன், பணிபுரியும் மகளிர் கடன், பெண்கள் தொழில் முனைவோர் கடன், வீட்டு வசதி கடன், வீட்டு அடமானக் கடன், பண்ணைசாராக் கடன் ஆகியவற்றின் கீழ் உதவிகள், 700 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், 500 பயனாளிகளுக்கு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், விதை கிராமத் திட்டம், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், 

வேளாண் இயந்திரமாக்குதல் துணை இயக்கம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய இயற்கை வேளாண்மை இயக்கம், நுண்ணீர் பாசன திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள்.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், 325 பயனாளிகளுக்கு பனை மேம்பாட்டு இயக்கம், தேசிய தோட்டக்கலை இயக்கம், நுண்ணீர் பாசனத் திட்டம், தேசிய வேளாண்மை மேம்பாட்டுத் திட்டம், தேசிய தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், உழவர் நல சேவை மையம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள்.

வேளாண்மை பொறியியல் துறை சார்பில், 200 பயனாளிகளுக்கு வேளாண்மை இயந்திர மயமாக்குதல் துணை இயக்கத் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம், முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட் வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், 660 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம், தேய்ப்பு பெட்டிகள், பழங்குடியினர் நலவாரியம் குடும்ப உறுப்பினர் அட்டைகள், 

வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீருதவி தொகைகள் என பல்வேறு உதவிகள்;
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் சார்பில், 385 பயனாளிகளுக்கு நிலப்பட்டாவுடன் கூடிய ஆழ்துளைகிணறுகளுக்கு மின் இணைப்புகள், சுய தொழில் தொடங்குவதற்கான நிதியுதவிகள், தொழில் முனைவோர் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள், 
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், 65 பயனாளிகளுக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டம், கலைஞர் கைவினைத் திட்டம், 

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள்.
மனித வள மேலாண்மைத் துறை (முன்னாள் படைவீரர் நலன்) சார்பில், 3 பயனாளிகளுக்கு முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் உதவிகள்,
உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு மறுவாழ்வு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் உதவிகள்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் 365 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்குதல்;
பள்ளிக் கல்வித் துறை சார்பில், 26 பயனாளிகளுக்கு விபத்துக்காப்பீட்டு பத்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் உதவிகள்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 200 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உதவிகள்;
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் 7 பேரூராட்சிகளில் 9 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகள் வழங்குதல்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், 34,342 பயனாளிகளுக்கு நகர நிலவரித் திட்டத்தின் கீழ் பட்டாக்கள், நத்தம் வீட்டுமனைப் பட்டாக்கள், மீனவ மக்களுக்கான வீட்டுமனைப் பட்டாக்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பில் இ-பட்டாக்கள்.

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 125 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை, விபத்து நிவாரண உதவித் தொகை, உழவர் அட்டைகள் ஆகிய உதவிகள்.

கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 19 பயனாளிகளுக்கு மீன்பிடி உபகரணங்கள், குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர மீன் வாகனம் மானியத்தில் வழங்கும் திட்டம், பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு கண்ணாடி நாரிழைபடகு இயந்திரம், வலைகள் மற்றும் குளிர்காப்பு பெட்டிகள் மானியத்தில் வழங்கும் திட்டத்தின் கீழ் உதவிகள்.

பால்வளத்துறை சார்பில் 5 புதிய சங்கங்கள் துவக்கி வைத்தல் திட்டம்; 
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 15 புதிய பேருந்துகள் சேவை தொடங்குதல்; முன்னோடி வங்கியின் சார்பில் 344 பயனாளிகளுக்கு கல்விக் கடன் உதவிகள் என பல்வேறு துறைகளின் சார்பில், மொத்தம் 101 கோடியே 49 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 45,447 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad