திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.694.02 கோடி செலவிலான 33 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 11 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 45,477 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கினார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.694.02 கோடி செலவிலான 33 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 11 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 45,477 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கினார்.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (21.12.2025) திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 

235 கோடியே 94 இலட்சம் ரூபாய் செலவிலான 33 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 356 கோடியே 59 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 11 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 

திருநெல்வேலி மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளின் விவரங்கள்

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், வடக்கு வள்ளியூரில் 33 இலட்சம் ரூபாய் செலவில் ராஜரத்தினம் நகர் பூங்கா, கோட்டையடியில் 44 இலட்சம் ரூபாய் செலவில் சமுதாயக் கூடம், வீரவநல்லூரில் 36 இலட்சம் ரூபாய் செலவில் மகாராஜா நகர் பூங்கா, 16 கோடியே 64 இலட்சம் ரூபாய் செலவில் குடிநீர் வழங்கல் பணிகள், 

கல்லிடைக்குறிச்சியில் 18 கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவில் குடிநீர் வழங்கல் பணிகள், மணிமுத்தாறு-இந்திரா காலனி, மூலகரைப்பட்டி-கடம்பன்குளம், 

திருக்குறுங்குடி-புதுத்தெரு, முக்கூடல்-இந்திரா காலனி ஆகிய இடங்களில் 1 கோடியே 63 இலட்சம் ரூபாய் செலவில் சமுதாயக் கூடங்கள், அம்பாசமுத்திரம்-ரகுமான் காலனியில் 30 இலட்சம் ரூபாய் செலவில் ஆரம்ப சுகாதார மையம், 

அம்பாசமுத்திரத்தில் 36 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள், களக்காடு-கீழப்பத்தையில் 1 கோடி ரூபாய் செலவில் சமுதாயக் கூடம், களக்காட்டில் 1 கோடியே 33 இலட்சம் ரூபாய் செலவில் வணிக வளாகம், 

வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத் துறை சார்பில், காவல்கிணறு பகுதியில் 86 இலட்சம் ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு தினசரி மலர் மற்றும் காய்கறி வணிக வளாகம்,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், முன்னீர்பள்ளத்தில் 35 இலட்சம் ரூபாய் செலவில் குடியிருப்புடன் கூடிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம்;

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், பாளையங்கோட்டை டாக்டர் அம்பேத்கர் நகர் திட்டப்பகுதியில் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் 53 கோடியே 19 இலட்சம் ரூபாய் செலவில் 408 அடுக்குமாடி குடியிருப்புகள்,

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 72 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவிலான இதயம், நரம்பியல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சிகிச்சைக்கான மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைத் தொகுதி, மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் 5 கோடியே 83 இலட்சம் ரூபாய் செலவில் தாய்மை மற்றும் குழந்தை பராமரிப்பு பிரிவு, தொற்று அல்லாத நோய்களுக்கான பிரிவு மற்றும் டயாலிசிஸ் பிரிவுகள், 

அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் 15 கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டடம், பாளையங்கோட்டையில் உணவு பகுப்பாய்வு ஆய்வகத்தின் மேல் தளத்தில் 1 கோடியே 69 இலட்சம் ரூபாய் செலவில் நுண்ணுயிர் ஆய்வகம், மேலதிருவேங்கடநாதபுரத்தில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மேலப்பாளையம் மீரா பள்ளிவாசலில் 1 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் சமுதாய சேவை மையம்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில், மன்னார்கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் 8 கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகள், திருக்குறுங்குடி, இட்டமொழி, என்.ஜி.ஓ.காலனி, நாடார் உவரி, முனைஞ்சிப்பட்டி, கல்லிடைக்குறிச்சி, முக்கூடல் ஆகிய இடங்களில் 1 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் புதிய நூலகக் கட்டடங்கள்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், பாளையங்கோட்டையில் 3 கோடியே 5 இலட்சம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டுதல் மையம்.

பால்வளத்துறை சார்பில், இராமகிருஷ்ணாபுரத்தில் 25 இலட்சம் ரூபாய் செலவில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம்.


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், நாங்குநேரி-கிருஷ்ணாபுதூர் ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் 38 இலட்சம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள்.


என மொத்தம், 235 கோடியே 94 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 33 முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள் 
 நீர்வளத் துறை சார்பில், சேரன்மகாதேவி வட்டம்-முக்கூடலில் 3 கோடியே 68 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரியநாயகிபுரம் அணைக்கட்டு மறுசீரமைப்பு பணிகள்.

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி, காரையார் சின்ன மயிலார் பகுதியில் தாமிரபரணி ஆற்றை கடந்து செல்வதற்கு 99 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எஃகு நடைமேடை மேம்பாலம் பணிகள்.

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், களக்காடு-சிதம்பராபுரம் சாலை மற்றும் கங்கைகொண்டான்-வடகரை-கைலாசபுரம் சாலை ஆகிய இடங்களில் 13 கோடியே 12 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்டப்பாலங்கள் அமைக்கும் பணிகள்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், பாளையங்கோட்டையில் 3 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உரக் கட்டுப்பாட்டு ஆய்வகம், அம்பாசமுத்திரத்தில் 2 கோடியே 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 மெட்ரிக் டன் திறன் கொண்ட விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 250 மெ.டன் கொள்ளளவு கொண்ட விதை சேமிப்பு கிடங்கு.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை-நரசிங்கநல்லூர் பேட்டை சிட்கோ மூலம் 223 கோடியே 76 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை அமைக்கும் பணிகள்.

கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில், வீரவநல்லூரில் 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனைக் கட்டடப் பணிகள்.

எரிசக்தித் துறை சார்பில், பாளையங்கோட்டை அரசு பன்முகச் சிறப்பு மருத்துவமனை, சீவலப்பேரி ஆகிய இடங்களில் 10 கோடியே 24 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 33/11 கிலோவாட் கொண்ட துணை மின்நிலையங்கள் நிறுவும் பணிகள்;
பள்ளிக் கல்வித் துறை, பொது நூலகத்துறை சார்பில், திருநெல்வேலியில் 98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “காயிதே மில்லத் அறிவுலகம்” நூலகக் கட்டடப் பணிகள்.

என மொத்தம், 356 கோடியே 59 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 
11 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார். 

இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர் பெருமக்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், ஆர். ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், 
மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, மருத்துவர் ராணி ஸ்ரீ குமார், ராபர்ட் புரூஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர்கள் டி.பி.எம்.மைதீன்கான், என்.சுரேஷ்ராஜன், பூங்கோதை ஆலடி அருணா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.ஞானதிரவியம், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.ஏ.எம். முகமது அபுபக்கர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் இரா.சுகுமார், மாநகராட்சி ஆணையர் மரு.மோனிகா ராணா, மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad