கன்னியாகுமரி – பூனே எக்ஸ்பிரஸ் ரயிலில் குடிபோதையில் ரயில்வே ஊழியர் அநாகரிகம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

கன்னியாகுமரி – பூனே எக்ஸ்பிரஸ் ரயிலில் குடிபோதையில் ரயில்வே ஊழியர் அநாகரிகம்.

கன்னியாகுமரி – பூனே எக்ஸ்பிரஸ் ரயிலில் குடிபோதையில் ரயில்வே ஊழியர் அநாகரிகம் - பயணிகள் அதிர்ச்சி.

இன்று (21ம் தேதி) காலை 8.40 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து பூனே நோக்கி புறப்பட்ட கன்னியாகுமரி – பூனே எக்ஸ்பிரஸ் ரயில் குழித்துறை அருகே வந்தபோது, ஏசி கோச்சில் இருந்த ஒரு ரயில்வே ஊழியர் குடிபோதையில் பயணிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.

குழித்துறையில் இருந்து ரயிலில் ஏறிய இரண்டு மாணவிகளிடம் அவர் மோசமாகவும் அவமரியாதையாகவும் நடந்துகொண்டதாக கூறப்படுவதால், தனியாக பயணம் செய்த மாணவிகள் அச்சத்தில் உறைந்தனர்.

இதை கண்ட சக பயணிகள் எச்சரித்தும், குடிபோதையில் தள்ளாடிய அந்த நபர் தொடர்ந்து கெட்ட வார்த்தைகள் பேசி அநாகரிக நடத்தையில் ஈடுபட்டதால், பெண்கள் மற்றும் குடும்பத்தினர் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர்.

சம்பவம் குறித்து டிக்கெட் பரிசோதகரிடம் (TTE) பயணிகள் புகார் அளித்த நிலையில், Indian Railways உடனடியாக தலையிட்டு குற்றம் செய்த நபர்மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளவும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad